கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதச விமான நிலையத்தில் 10 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து வந்த நபர், மிக சூட்சுமமான முறையில் தனது பயணப் பொதிகளுக்குள் மறைத்துவைத்தே இந்த சிகரட்டுகளை நாட்டுக்கு
இதன்போது 10 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பெறுமதியான , 91 சிகரட்டு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.