சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் செல்போனில் ஆபாச படம் பார்ப்பது என்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இது குறித்த பட்டியல் ஒன்றை மத்திய அரசு தமிழக காவல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளது.
குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்பதும், பகிர்வதும், சேமித்து வைத்திருப்பது குற்றம் இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் டிஜிபி அறிவித்திருந்தார். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவனுக்கு மர்ம நபர் பின்னணியில் வாக்கி டாக்கி ஒலிக்க காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
முதலில் நான் படம் பார்க்கவில்லை என்று அந்த சிறுவன் கூற ஒரு கட்டத்தில் மிரட்டலில் பயந்து ஆமாம் என்று ஒப்புக் கொண்டார். பின்னர் அவனிடம் இருந்து ஏழாயிரம் ரூபாயை பறிக்க திட்டமிட்ட அந்த மர்ம நபர் சிறிது நேரத்தில் இணைப்பை துண்டித்து இருக்கின்றார். இதுகுறித்து கூடுதல் டிஜிபி ரவியை தொடர்பு கொண்ட பொழுது நெல்லை மாவட்ட காவல் நிலையத்திற்கு எந்தவிதமான லிஸ்ட்டும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால் பள்ளி மாணவர்களிடம் பேசி அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆபாச படம் பார்ப்பவர்களை காவல்துறையினர் பிடிக்கிறார்களோ, இல்லையோ? ஆனால் இந்த மர்ம கும்பலை முதலில் பிடிக்க வேண்டும். கேலி கிண்டல் செய்தால் இதயம் பலஹீனமான சிலர் மிரட்டலுக்கு அஞ்சி தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படும். அதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கின்றது.