மெக்சிகோவில் லொட்டரியில் கிடைத்த பரிசு பணத்தை வைத்து வயதான முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த 8 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கரீன் இஸ்பினோசா என்ற பெண் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார்.அதில், நானும் என் எட்டு வயது மகன் அடாலிட்டும் ஒரு உணவகத்துக்கு சாப்பிட சென்றோம்.
அங்கு சொக்லேட்கள் விற்கும் வயதான முதியவர் வந்து அங்குள்ளவர்களிடம் வியாபாரம் செய்ய முயன்றார். ஆனால் யாருமே அவரிடம் வாங்காததால் அவரின் முகம் வாடியது.
மேலும் அவர் மிகுந்த பசியில் இருப்பது தெரிந்தது, இதை பார்த்த என் மகன் அடாலிட் தான் லொட்டரியில் வென்ற 70 pesos பரிசு பணத்தை வைத்து அந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்து சாப்பிட சொன்னான்.
அவர் அதை நெகிழ்ச்சியோடு வாங்கி சாப்பிட்ட போது அவர் கண்களில் கண்ணீர் வந்தது, அதை பார்த்த எனது மகனும் அழுதுவிட்டான்.
லொட்டரியில் ஜெயித்த பணத்தை வைத்து அவன் வேறு திட்டம் போட்டான், ஆனால் இந்த நல்ல விடயத்துக்கு அது செலவானது என புகைப்படங்களுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவானது 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகள் பெற்று வைரலானது.
மேலும், சிறுவன் அடாலிட்டுக்கு மிக பெரிய இதயம், அவன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி பாராட்டியுள்ளனர்.