வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி இவர் தான் !

தல அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டான நிலையில், இயக்குநர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் இருவரும் மீண்டும் இணைந்து ’வலிமை’ படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்தப் படத்தில் அஜித் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒன்று போலீஸ் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனம் நடத்திய விருது விழாவில் கலந்துகொண்ட போனி கபூர், வரும் வெள்ளிகிழமை (டிச.13) முதல் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

2020-ம் ஆண்டு தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த ஆண்டு தீபாவளியன்று அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நிச்சயம். அதே வேளையில், இந்த படத்தின் ஹீரோயினாகபாலிவுட் நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் யார் ஹீரோயின் என்ற அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள்.

 

ஹீரோயின்கள் தேர்வு பட்டியலில் பாலிவுட் நடிகர் சோனாக்ஷி சின்ஹா-வின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதாம். இவர் ஏற்கனவே, தமிழில் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.