பிற்பகல் திருமண நிகழ்விற்கு மணமகன் தாமதமாக வந்த நிலையில் மணமகள் வேறுநபரை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்த நிலையில், ஆனால், இந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படவில்லை என இரு வீட்டாரும் நினைத்ததால் மீண்டும் முறைபடி நேற்று முன்தினம் திருமணத்தை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், வரதட்சனை பிரச்சனையால் இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் வரை சென்று பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால், மணமகன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, மணப்பெண்ணின் உறவினர்கள் ஒரு அறையில் வைத்து அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் நேற்று முன்தினம் நடக்க இருந்த திருமணத்திற்கு வர மறுத்துள்ளார்.
இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில், அன்று நள்ளிரவே மாப்பிள்ளை மற்றும் அவரின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.
இதற்கிடையில், மணமகள் வீட்டார் மணமகளுக்கு உள்ளூரைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைத்துவிட்டனர். இது தொடர்பாக இரு வீட்டாரும் மாறிமாறி ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.