எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ செயற்படுவார் என, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமைப் பதவியில் தானே தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் செயற்பட்டால் கட்சித் தலைமையை அவருக்கு வழங்க முடியும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தலைவர் என்ற ரீதியில் அவரது பணிகளை உரிய முறையில் செய்தால் கட்சி தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என என ரணில் உறுதியாக கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.