பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர் கான் 54 வயதாகும் இவருக்கு அமீர் கானுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் உள்ளார். இவரது மனைவியின் பெயர் ரனா தத்தா. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்த அவர் லகான் படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் உள்ளார்.
அமீர்கானின் மகள் ஐரா பாலிவுட் நாடகத்தில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஐரா, சமீபத்தில் இளைஞர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு இவர்தான் உங்கள் பாய் பிரண்டா என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாத ஐரா
மீண்டும் வேறொரு பதிவில் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என ரசிகர் ஒருவர் கேட்க்க, அதற்கு ஐரா இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதில் அளித்தார். ஆனால் நேரடியாக பதில் கூறாமல் அப்பதிவின் ஹாஷ் டேக்கில் லவ், மிஸ் யூ, ரிலேஷன்ஷிப் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் ஐரா நிச்சயம் காதலில் தான் விழுந்துள்ளார் என்பதை ரசிகர்கள் யூகம் செய்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஐரா காதலிப்பதாக கூறப்படுபவர் மிஷால் கிருபளானி என்ற இசையமைப்பாளர். இவர்தான் என்னவர் என்று இன்ஸ்டாகிராம் ஹாஷ் டாக்குகளில் சூசகமாக ஐரா தெரிவித்துள்ளார்.
ஐரா இசையமைப்பாளர்நெருக்கமான மிஷால் கிருபளானியுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிடும் போது சிலர் உங்கள் அப்பாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.