இந்தி தொலைக்காட்சி பிரபலம் ஸ்வேதா திவாரி. இவர் பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார். ஸ்வேதா ரசிகர்கள் மத்தியில் சிக்கி பட்ட அவஸ்தை குறித்து தன்னுடைய பழைய நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
Kasautii Zindagii Kay என்னும் சீரியல் நேரத்தில் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ராய்ப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். அப்போது ரசிகர்கள் என்னை சூழ்ந்துகொண்டார்கள். கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் இருந்தால், அவர்கள் என் மீது விழுந்தார்கள். என்னை தொட்டார்கள்.
என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அத்தனையையும் மீறி அவர்கள் என்னுடைய மேலாடையை பிடித்து இழுத்தனர். ஒரு கட்டத்தில் என்னுடைய மேலாடை கிழிந்து அவர்கள் கையில் சென்றுவிட்டது. நான் கைகளால் மறைத்துக்கொண்டு என்னைக் காப்பாற்றுங்கள் என்று கத்தினேன். கடைசியில் பாதுகாவலர்கள் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி என்னை மீட்டு ஒரு காரில் அனுப்பிவைத்தனர் என்று கூறினார்