ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷதலைமையிலான அரசாங்கத்திற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் என மத்திய கிழக்குநாடுகளின் தூதுவர்கள் தெரித்துள்ளார்கள்.
பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ஒத்துழைப்புக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார்கள்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது தூதுவர்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.
இலங்கைக்கான பலஸ்தீன், எகிப்து, குவைத், ஓமான், ஈரான், லிபியா, கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் தூதுவர்கள் ஜனாதிபதியை இன்று சந்தித்திருந்தனர்.