சர்வதேச அளவில் ஆயுத விற்பனையாகும் முதல் பத்து பெரிய ஆயுத நிறுவனங்களின் பட்டியல் இதோ!!!

உலகின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளர்கள் உலகளாவிய விற்பனையில் கடந்த ஆண்டு ஏற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுத விற்பனையில் கடந்த ஆண்டு அமெரிக்க நிறுவனங்கள் பல முன்னணியில் இருந்துள்ளன.

முதல் 100 ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் கடந்த ஓராண்டில் மட்டும் 319 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளனர். இது 2017 ஆம் ஆண்டிலிருந்து 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் 2018 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆயுத விற்பனையானது 2002 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதிகரித்த ஆயுத விற்பனையானது பெரும்பாலும் ஐந்து பெரிய அமெரிக்க ஆயுத நிறுவனங்களிலிருந்து நடந்துள்ளது.

மேலும் 100 உலகளாவிய நிறுவனங்களின் விற்பனையில் 35 சதவீதத்தை இந்த ஐந்து அமெரிக்க நிறுவனங்கள் ஈட்டியுள்ளது.

குறித்த பட்டியலில் மேரிலாந்தின் வடக்கு பெதஸ்தாவை தளமாகக் கொண்ட அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஆயுத விற்பனை அதிகரித்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுவது, 2017 ஆம் ஆண்டு நடந்த ஆயுத நிறுவனங்கள் இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களே என கூறப்படுகிறது.

ஆயுத விற்பனையில் உச்சம் தொட்ட முதல் 100 நிறுவனங்களில், 27 நிறுவனங்கள் ஐரோப்பாவை மையமாகக் கொண்டு இயங்குபவை எனவும், இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள முக்கியஸ்தர்களால் இந்த நிறுவனங்கள் செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

விற்பனையில் உச்சம் தொட்ட முதல் 10 நிறுவங்களில் 6-வது இடத்தில் இருக்கும் பிரித்தானிய நிறுவனமான BAE Systems-ல் மொத்தம் 83,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

பிரித்தானிய ஆயுத உற்பத்தியாளர்கள் கடந்த ஓராண்டில் 26.7 பில்லியன் பவுண்டுகளை ஈட்டியுள்ள நிலையில், ஜேர்மானிய நிறுவனங்கள் விற்பனையில் 3.8 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளனர்.

2018 இல் முதல் பத்து பெரிய ஆயுத நிறுவனங்கள்:

1. Lockheed Martin – US – £35.9billion

2. Boeing – US – £22.1billion

3. Northrop Grumman – US – £19.9billion

4. Raytheon – US – £17.8billion

5. General Dynamics – US – £16.7billion

6. BAE Systems – UK – £16.1billion

7. Airbus – Europe – £8.8billion

8. Leonardo – Italy – £7.5billion

9. Almaz-Antey – Russia – £7.3billion

10. Thales – France – £7.2billion