படவிழாவில் மேடையிலேயே அழுத நடிகை தீபிகா படுகோண்!!

இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் நடந்து கொண்டிருப்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பெண்களுக்காக பல அமைப்புகளும் ஆதரவாக பேசினாலும் பெண்களை சீரழிப்பதை ஆண்கள் நிறுத்தாமல் தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தன்னுடைய 15 வயதிலேயே அமிலத்தாக்குதலால் பாதிக்கபட்ட லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை பற்றி படம் தயாரித்து இயக்கப்பட்டது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோண் நடித்து இன்று இப்படத்தில் டிரெய்லர் வெளியானது. இப்படம் அமிலத்தாக்குதலை தடுப்பது பெண்கள் எப்படி இழிவு படுத்தபடுகிறார்கள் என்பதை வைத்து எடுக்கப்பட்டது.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசி தீபிகா படுகோண் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். நெகிழ்ச்சியாக பேசிய தீபிகா பேசும் போதே கண்ணீர்மல்க அழுதுள்ளார். இதனால அரங்கில் இருந்தவர்களும் மனமுடைந்துள்ளனர்.

பெண்களுக்கு எதிராக வீசப்படும் அமிலத்தாக்குதலை தடுப்பதற்காக ஆசீடை விற்பனை செய்ய கூடாது என்று தற்போது லட்சுமி அகர்வால் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.