ஷாருக்கான் தி பவர் லிஸ்ட் 2019 நிகழ்ச்சியில் தன் மனைவி கவுரி கானுடன் சேர்ந்து கலந்து கொண்டார். அப்போது, அவரது மனைவி முன்னால் நடந்து செல்லும் பொழுது அதை அழுக்காகி விடாமல் ஷாருக்கான் தூக்கி பிடித்து காப்பாற்றுகின்றார். மனைவி மீது அதீத அன்பு கொண்ட ஒரு கணவரால் மட்டுமே இதனை செய்ய முடியும்.
மக்கள் ஷாருக்கானை காரணமில்லாமல் கிங் ஆஃப் ஹார்ட்ஸ் என்று அழைக்கவில்லை. அவரை காதலிக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் முக்கிய காரணம், அவர் பெண்களை நடத்தும் விதம் தான். கண்ணியத்துடனும், மரியாதையுடனும் அவர் எப்போதும், பெண்களை நடத்துவதை பார்த்து தான் பலரது புருவங்கள் உயர்கிறது.
இந்நிகழ்வில் தனது மனைவியின் நீண்ட கவுனை எடுத்தபோது தான் ஒரு முழுமையான பண்புள்ளவர் என்பதை ஷாருக்கான் மீண்டும் நிரூபித்து இருக்கின்றார். தன்னுடைய மனைவியின் கவுனைக் கவனித்துக் கொண்ட இந்த சம்பவமானது, மென்மேலும் அவர் மீதான காதலை நமக்கு அதிகரிக்கின்றது.
திருமணமாகி வருடங்கள் பல ஆன போதும், ஷாருக்கானும், கவுரி கானும் இது போல ஒரு இனிமையான தருணத்தால் நம்மை மூக்கின் மேல் விரல் வைக்க செய்கின்றனர். மீண்டும், மீண்டும் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரும் சிறந்த ஜோடி என்பதை நிருபித்து கொண்டு இருக்கின்றனர்.
மனைவியை எப்படி மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை ஷாருக்கானை பார்த்து கற்று கொள்ளுங்கள். பெண்கள் ஷாருக்கான் மாதிரி கணவர் வேண்டும் என கூற காரணம் இது தான் போல.