தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நித்தியா மேனன். மிஷன் மங்கள் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நித்தியா மேனன் விஜய்யுடன் மெர்சல் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார், பின் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் “சைக்கோ” படம் வெளியாகவுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழக்கை வரலாறு பற்றி கூறும் “தி ஐயன் லேடி” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் “பெண்களுக்கு சினிமா துறையில் மட்டுமல்ல மற்ற துறைகளிலும் பாதுகாப்பில்லை. என் வாழ்க்கையில் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயன்றனர். ஆனால் பெண்களிடம் கெளரவமாக நடக்க கற்று கொள் என்று கடுமையாக எச்சரித்தேன்.
என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கு இருக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களும் அதில் தலையிடுவார்கள். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் முகத்தில் அறைந்தது போல் தைரியமாக சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்”. என நித்தியா மேனன் கூறியுள்ளார்.