சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் நந்தினி. இந்த தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நித்யா ராம். இந்த தொடரில் இவரது நடிப்பிற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் பிரபலமானார் நித்யா. தமிழ் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். நந்தினி தொடரில் வெற்றியை தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நித்யாவுக்கு தற்போது மிகவும் கோலாகலமாக இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்தது. நித்யாவுக்கு 2014-ம் ஆண்டு வினோத் கௌடா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.
நித்யாவிற்கு சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
\