பாஜகவில் இணையும் நயன்தாரா..?!

தமிழகத்தின் முன்னணி நடிகையாக இன்றும் வலம் வந்த கொண்டிருப்பவர் நயன்தாரா. அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போதைய திரையுலகின் மிகவும் பிசியான நடிகையும் அவர் தான்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பகவதி அம்மன் கோயிலும் வழிபாடு நடத்தினார், என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து அதிகம் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதுபற்றிய தகவல் தான் தற்போது பரவி வருகிறது.

நயன்தாரா அவரது, ஆன்மீக பயணத்தில் அரசியலையும் சேர்த்திருக்கிறார் என்பது தான். இந்த பயணத்தின் போது பாஜக முன்னாள் எம்பி, அந்த கட்சியின் மூத்த உறுப்பினருமான நரசிம்மனை திருச்செந்தூரில் சந்தித்து இருக்கிறார்.

இது குறித்து நரசிம்மன் தெரிவித்திருப்பது இது தான்: இது ஒரு எதிர்பாராத சந்திப்பு. முன்கூட்டியே திட்டமிடாத ஒன்று. ஐதராபாத் என்கவுன்ட்டரை வரவேற்றவர் நயன்தாரா.

பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

இதுபோன்ற நல்ல விஷயங்களை கூறும் நீங்கள் பாஜகவில் இணைந்து விடுங்கள் என்று அழைப்பு விடுத்தேன். அப்போது தான் இதுபோன்ற கருத்துகள் மக்களை சென்றடையும் என்று கூறினேன். ஆனால் அவர் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு சென்றுவிட்டார் என்றார் நரசிம்மன்.