சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தொனிப்பொருளில் இன்று யாழ்ப்பாணம் மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் வரை நடைபயணம் ஒன்றை வி.சகாதேவன் ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை 8 மணியளவில் மாதகல் சங்கமித்தா விகாரையில் இருந்து தனது தாயின் ஆசிர்வாதத்தோடு நடை பயனத்தை ஆரம்பித்துள்ளார்.
ஒரு சமாதான செய்தியை சிங்கள மக்களுக்கும், நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைபயனத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார்.
நடைபயனத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.