தனியாளாக மகனை வளர்த்த தடுமாறிக்கொண்டிருந்த ஒரு பெண் தன் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனதையடுத்து, ரகசிய கமெரா ஒன்றை மறைத்துவைத்தார்.
பிரித்தானியாவிலுள்ள Hull என்ற பகுதியில் மகனுடன் தனியாக வசித்து வருபவர் சமந்தா வுட் (27).
அடிக்கடி அவரது வீட்டில் சேமித்து வைத்த பணம் காணாமல் போவதை அறிந்த சமந்தா, ஒருவேளை தானே எங்கோ தவறவிட்டிருக்கலாம், அல்லது பணத்தை வைக்காமலே இருந்திருக்கலாம் என தன்னையே சமாதானம் செய்து கொள்வார்.
ஆனால் அவரது மகன் லூக்காஸ் பணம் சேமித்து வைத்திருந்த உண்டியலும் காணாமல் போகவே, சமந்தாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தன் வீட்டில் கமெரா ஒன்றை மறைத்து வைத்துள்ளார் அவர்.
ஒரு நாள் அவரது வீட்டுக்கு வந்த அவரது தோழியான மெலிசா கோலியர் (28), தேநீர் தயாரித்து எடுத்து வருவதாகக் கூறி சமையலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது தற்செயலாக கமெராவுடன் இணைக்கப்பட்ட திரையை சமந்தா கவனிக்க, அதில் மெலிசா கைப்பை ஒன்றிலிருந்து பணத்தை திருடி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைப்பது தெரிந்துள்ளது.
https://www.dailymail.co.uk/video/index.html?ico=embedded
13 வயதாக இருக்கும்போதிலிருந்து தன்னுடைய தோழியாக இருந்து வரும் மெலிசா, அதுவும் வசதியான பெண்ணான அவர், ஒரு பிள்ளையை வளர்க்க தடுமாறும் தன்னிடமிருந்து திருடுவதைக் கண்டபோது சமந்தாவுக்கு அழுகைதான் வந்திருக்கிறது.
ஆதாரத்துடன் பொலிசாருக்கு சமந்தா தகவலளிக்க, மெலிசா மீது விசாரணை தொடங்கியுள்ளது.
விரைவில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது.
தற்போது, தான் திருடியதை ஒப்புக்கொண்டுள்ள மெலிசா, அதற்காக சமந்தாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி மன்னிப்புக் கோரியுள்ளார்.