முதன்முறையாக இரட்டைத்தலை கொண்ட பாம்பை பார்த்த கிராமமக்கள், புராணக்கதைகளை நம்பிக்கொண்டு, அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் நகரில் உள்ள பெல்டா வன வரம்பின் ஏகருகி கிராமத்திற்குள் இரட்டைத்தலை நாகம் ஒன்று பிடிபட்டுள்ளது.
இரு தலைகளின் புராண முக்கியத்துவத்தை நம்பும் கிராமவாசிகள், அதனை மீட்புப்படையினரிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி சக்ரவர்த்தி கூறுகையில், “இது ஒரு மனிதன் இரண்டு தலைகள் அல்லது கட்டைவிரல்களைக் கொண்டிருப்பது போன்ற ஒரு உயிரியல் பிரச்னை. இதேபோல் இந்த பாம்புக்கு இரண்டு தலைகள் உள்ளன. இதற்காக புராண நம்பிக்கை தொடர்பான எதையும் செய்ய வேண்டியதில்லை.
இதனை சிறைபிடித்தால், அதன் ஆயுட்காலம் மட்டுமே அதிகரிக்கும். அதேசமயம் அதனை பாதுகாத்தால் இனத்தின் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் எனக்கூறியுள்ளார்.
விலங்கியல் நிபுணரான Soma Chakraborty கூறுகையில்,”இந்த இனம் வங்காள காரிஸ், கியூட் மற்றும் இந்தி மொழியில் கலா நாக் என்று அழைக்கப்படுகிறது. விஷத்தன்மை கொண்டது” எனக்கூறியுள்ளார்.
West Bengal: A two-headed snake found in the Ekarukhi village of Belda forest range. (10.12.19) pic.twitter.com/jLD4mPWhv8
— ANI (@ANI) December 10, 2019