நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்ட சிறுவனை நோக்கி வந்த சுறா.. பின்பு நடந்த சுவாரசியம்.. வைரல் காட்சி..!

நீர்சறுக்கு விளையாட்டில் சிறுவன் ஒருவன் சுறாவின் மீது மோதி உயிர்பிழைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

அமெரிக்காவில், ப்ளோரிடாவில் உள்ள கடற்கரையில் 7 வயது சிறுவன் ஒருவன் சாண்ட்லர் மூர் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுப்பட்டுள்ளான்.

அப்போது உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கும் நேரத்தில் எதிரில் ஒரு சுறா மீன் வருவதைக்கண்டு தண்ணீரில் குதித்துள்ளான். அதன் பின் அந்த சுறா எதிர் திசையை நோக்கி சென்றதால் சிறுவன் உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது.