திருமணம் முடிந்த கையோடு நடிகர் சதீஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு இன்று மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவருக்கு ஒரு பெரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியின் உச்சத்தில் சதீஷ் உள்ளாராம்.

இதேவேளை, இந்த படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி என பெரிய பட்டாளமே இணைந்துள்ளது. இதனால், ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.