சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக சண்டைபோட்டுக்கொண்ட நடிகை மீனா-குஷ்பூ..!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இன்றளவும் வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இன்று இவரது, 70வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெங்களூரு போக்குவரத்துத்துறையில் நடத்துநராக பணியாற்றிய ரஜினிகாந்தை 1975ஆம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாலச்சந்தர்.

இதைத்தொடர்ந்து, ரஜினி தனக்கென தனி ஸ்டைல், நடை, பாவனை என அனைத்தையும் வைத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆளும் தனிக்காட்டு ராஜாவாக திகழ ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை, இவர் இடத்தை பிடிப்பதற்கு யாரும் இல்லை என்ற கர்வத்துடன் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்நிலையில், இதுவரை இவர் 167 படங்கள் நடித்துள்ள நிலையில், 168 ஆவது படம் இயக்குநர் சிவா இயக்கத்தில் படபிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தில், 80ஸ் காலத்தில் ரஜினியுடன் நடித்த குஷ்புவும், நடிகை மீனாவும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஒரு டிவி நிகழ்ச்சியில் மீனா மற்றும் குஷ்பு விளையாட்டாக சண்டை போட்டு கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.