மகாநதி படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்தவர் ஷோபனா. இப்படத்தில் அவர் பாடிய ஸ்ரீரங்க ரங்க பாடல் மிகவும் பிரபலமானது.
பல பாடல்களை பாடி கலைமாமணி விருது பெற்றுள்ள இவர் கடந்த 1996 ல் சென்னை சிம்போனி நிறுவனத்திற்கு கந்த சஷ்டி கவசம் பாடலை பாடிக்கொடுத்துள்ளார்.
பின்னர் ட்விங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் தலைப்பில் ஆல்பம் பாட அந்நிறுவனம் அணுகியுள்ளது.
இதில் 33 பாடல்களை அந்நிறுவனம் ஷோபனா பதிப்புரிமையை சட்ட விரோதமாக விற்றுள்ளது தெரியவந்துள்ளதால் ஷோபனா வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் ரூ 20 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் மீது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.