பிக் பாஸ் தர்ஷனா இது..?

விஜய் தொலைக்காட்சில் ஒளிபரபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் தர்ஷன். அவருக்கு என்று ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கி வேற லெவல்ல பாப்புலர் ஆகி கொண்டு போகிறார்.

இந்த நிலையில் தர்ஷன் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கமல் பைனல் ஸ்டேஜ்ல அறிவித்திருந்தார், இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும், பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.

இதை தொடர்ந்து, தர்ஷன் புதிய லுக்கில் ஒரு புகைப்படம் வெளியிட்டு ‘ விரைவில் ‘ என்று பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அது என்னவா இருக்கும் என்று பலவித யோசனையில் இருக்கிறார்கள்.

மேலும், அவர் ரசிகர்கள் என்னவாக இருந்தால் என்ன.? அது நல்லா நடக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அது என்னவா இருக்கும் என்பதை நாமும் பொறுத்திருந்து பார்போம்.