38 பேருடன் மாயமான சிலி விமானம்… கடலில் மிதந்து வந்த பாகங்கள்..!

தென்னமெரிக்க நாட்டில் உள்ள சிலியின் தெற்கு பகுதியில் இருந்து, அண்டார்டிகாவில் உள்ள சிலி விமானப்படை தளத்திற்கு இராணுவ விமானம் செல்ல தயாரானது. இந்த விமானத்தில் செல்ல அனைவரும் தயாராகி, விமானம் புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் 38 பேர் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடன் கொண்ட தொடர்பை இழந்துள்ளது. இதனால் பதறிப்போன விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து விமானம் மாயமானது குறித்த தகவலை மேல் அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து, விமானத்தை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட துவங்கினர். மேலும், மாயமாகிய சி-130 ஹெர்குலஸ் வகை இராணுவ விமானம் என்பது தெரியவந்தது.

மேலும், விமானம் எப்படி மாயமானது? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வந்தது. இது குறித்து அந்நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினோரா கூறிய சமயத்தில், இச்செய்தி தமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் காணாமல் போன பகுதியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அதன் பாகங்கள் கடலில் மிதந்திருப்பதை தேடுதல் குழுவினர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்த பாகங்கள் விமானத்தின் எரிபொருள் டேங்கின் எஞ்சிய பாகங்கள் என்று விமானி ஈக்குவாடரோ மஸ்குரியா கூறியிருக்கிறார். ஆனால், இந்த பாகங்கள் காணாமல் போன விமானத்துடையதா என்று உறுதிப்படுத்த வேண்டி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.