தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்செண்ட். இதன் மூலம் அவர் பல மாமியார்களில் அன்பை பெற்ற பொறுமை சாலி மருமகளாகிவிட்டார்.
மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட அவருக்கு இந்த சீரியலே தமிழில் முதல் அறிமுகம் என்று சொல்லலாம். பின் பொன்மகள் வந்தாள், அவளும் நானும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
சில படங்களிலும் நடித்துள்ள அவர் கடந்த 2017 ல் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது பொன்மகள் வந்தாள் சீரியலுக்காக முற்றிலும் வித்தியாசமாக தன் தோற்றத்தை வயதான பாட்டியாக மாற்றியுள்ளார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.