கர்நாடகத்தில் பெங்களூரு நகரை சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து ஒரு பெண்ணை பார்த்து திருமணத்திற்கு தேவையான வேலைகளை செய்ய துவங்கி இருக்கின்றனர். ஆனால் கிரண் எந்த ரியாக்ட்டும் செய்யவில்லை எனவே அவருக்கு சம்மதம் தான் எனநினைத்து கொண்டு திருமண வேளைகளில் தீவிரமாக இறங்கினர்.
இருப்பினும், கிரணுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லாததால் எப்படி திருமணத்தை நிறுத்துவது என திட்டமிட்டு ஒரு திட்டத்தை கண்டறிந்தார். பின்னர், பெண் வீட்டாரை தொடர்பு கொண்ட கிரண், பெண்ணின் பெற்றோரிடம் தனக்கு “எய்ட்ஸ்” இருப்பதாக கூறி இருக்கின்றார்.
எனவே குழப்பத்தில் அவர்கள் திருமணத்தை தள்ளி வைத்தனர். பின்னர், பின்னர் கிரணின் குடும்பத்தினருக்கு இது தெரிய வர அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவருக்கு எய்ட்ஸ் இல்லை என தெரியவந்துள்ளது. பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தி காரணத்தை கேட்க எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்ட பெண் வீட்டினர் கோபமடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, கிரண்குமாரை கைது செய்து ரிமாண்டிற்கு அனுப்பினர்.