பாலியல் குற்றங்களுக்கு புதிய சட்டம்.!

ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை வழங்கும் புதிய சட்டத்தை அம்மாநில அரசு இயற்றியுள்ளது. இச்சட்டம் இன்று சட்டசபையில் நிறைவேறியுள்ளது.

முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசுக்கு பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கல் செய்தார்.

இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி உள்ளனர். ஐதராபாத் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரை குறிக்கும் விதமாக ‘திஷா’ என்ற பெயரில் பெண்களை பாதுகாக்கும் சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இச்சட்டத்தின் வழக்கு பதிவு செய்த 7 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும். குற்றம் நடந்த 14 நாட்களில் நீதிமன்ற விசாரணை முடிக்கவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாட்களில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்ற மசோதவை நிறைவேற்றப்பட்டுள்ளது.