பிராய்லர் சிக்கனால் ஏற்படும் புற்றுநோய்…!!!!

பொதுவாக பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் என்று பலருக்கும் தெரிந்தே அதை இன்னும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.

தற்போது சிக்கனை விரும்பி சாப்பிடும் குழந்தைகள், பெரியவர்கள் என அதிகரித்து வரும் நிலையில், பெண் குழந்தைகள் விரைவில் பூப்படையவும், மலட்டுத்தன்மை ஏற்படவும், ஆண் குழந்தைகளுக்கும் ஆண்மைத்தன்மையினை மிகவும் பாதித்து வருகின்றது.

சமீபத்தில் 45 நாட்களில் வளர்கக்படும் பிராய்லர் கோழிகள் தற்போது 20 நாட்களில் வளர்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து கலந்த தீவனங்களால் கோழிகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இதனை வதந்தி என்று வெளியிட்டிருந்தார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.

இந்நிலையில் இம்மாதிரியாக வளர்க்கப்படும் கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆம் ஈரோட்டில் விற்கப்பட்ட 2லட்சத்திற்கும் மேலான கோழிகளுக்கு இந்த புற்றுநோய் தாக்கம் இருந்தது தற்போது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.