இணையத்தில் தீயாய் பரவும் பிசாசு உதடுகள்…. இதில் இருக்கும் ஆபத்து மிக கொடூரமாம்!

இன்றைய காலத்தில் தன்னை அழகுப்படுத்திக்கொள்ள பல்வேறு விஷப்பரிட்சையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள ஒப்பனை தான் பிசாசு உதடு.

வித்தியசமான ஒப்பனை முறைகள் மூலம் உதடுகளை இயற்கைக்கு மாறான முறையில் மாற்றி டிரெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆனால் இவை உண்மையானது போன்று தோற்றம் அளிப்பது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் பிரபலமானது தான் இந்த உதடுகள் அலைகள் போன்று ஒப்பனை செய்வது. இவ்வாறான உதடுக்கு பிசாசு உதடு அல்லது அக்டோபஸ் உதடுகள் என்று பெயர் பெற்றுள்ளது.

உதடுகளினுள் நிரப்பிகளை உட்செலுத்தி இவ்வாறு செய்து வருவது இயற்கைக்கு மாறானது என்று கூறப்படுகின்றது. அழகுகலை நிபுணர் ஒருவர் கூறுகையில், ஆரம்பத்தில் இது போட்டோஷாப் என்று நினைத்த எனக்கு இது உண்மை என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த மோசமான ஒப்பனையினால் உங்களது உதடுகள் முற்றிலும் சிதைந்துவிடும். மேலும் இயற்கையான உதடுகளை திரும்ப பெற இயலாது. இதனை யாரும் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.