இலங்கை நல்லை ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நித்தியானந்தா கூறியதை தாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்தா தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.