விஜய்யின் அண்மைய தோற்றம் எப்படி என புகைப்படங்கள் மூலம் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. தற்போது அவர் கர்நாடகாவின் தளபதி 64 படத்திற்காக சென்றுள்ளார்.
அவர் இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே அண்மைகாலமாக கலந்து கொள்கிறார். நேர்காணல் என்பது சமீபத்திய வருடங்களில் மிகவும் அரிது.
ஒருமுறை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆனந்த கண்ணன் விஜய்யிடம் பவ்யமாக கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாராம். சில நிமிடங்களில் விஜய் நிறுத்திவிட்டு ஏன் ஆனந்த கண்ணன் வழக்கமாக நீங்கள் நன்றாக கேள்வி கேட்பீங்களே? இப்போ வேறமாதிரியாக இருக்கீங்களே, உங்களுக்கு என்னாச்சு? என கேட்டாராம்.
உடனே ஆனந்த கண்ணன், சார் உங்களிடன் ஏதாவது தவறாக கேள்வி கேட்டால் நீங்கள் சென்றுவிடுவீர்கள், கோபம் அடைவீர்கள் என கூறினார்கள், அதனால் தான் என கூறினாராம்.
உடனே விஜய் அதெல்லாம் விடுங்க, உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும், நீங்க கேளுங்க என கேட்டாராம்.