தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அவர் நடிக்கவந்த தொடக்கத்திலே, இவரது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் இடம்பெற்று விட்டார்.
இதை தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் நடித்த ஸ்ரேயா ஒருசில ஆங்கில படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, இவர் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து விடும் அவர். அங்கிருந்த படி தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை விமர்சனம் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.