தோட்டத்தொழிலாளர் 14 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
லிந்துலை, ஹென்போல்ட் தோட்டத்தில் இன்று தோட்டத் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் மீது குளவிக் கொட்டியுள்ளது.
இதன்போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 6 பேர் சிகிச்சைகளுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும், 8 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 ஆண்களும், 7 பெண்களும், ஒரு சிறுமியும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.