காதலில் விழுந்தேன் என்னும் படத்தில் நகுலுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் சுனைனா.மேலும், தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இவரால் தொடர்ந்து சரியான படங்கள் அமைக்க முடியவில்லை. மேலும், முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு இவரால் வரமுடியவில்லை.
இதனால், அவர் தற்சமயம் வெப் சீரிஸ், சின்ன படங்கள் சிலவற்றில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். பொதுவாகவே சினிமா நடிகைகள் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட ஹீரோ மீது ஈர்ப்பு இருந்தது என்று கூறுவது வழக்கம்.
அந்த வகையில், ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இவரிடம் உங்களின் கிரஷ் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சுனைனா பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது தான் முதன் முதலில் கிரஷ் இருந்தது. Koi Mil Gaya படம் வெளியான போது அது என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்தது என்று ஓப்பனாக தெரிவித்திருந்தார்.
First every hero crush was @iHrithik . Koi mil gaya was a big part of my life when it came out https://t.co/WHfnk2J1Nb
— Sunainaa (@TheSunainaa) December 14, 2019