தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்திலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தினை என்னதான் விமர்சித்தாலும், ஆனால் ரசிகர்களுக்கு அவர் என்றும் மன்னன் தான். ரசிகர்களை ஏமாற்றாத ஒரு நடிகராகவே வலம்வந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தனது ரசிகரின் ஆசையை ஏற்று அவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியினை ரஜினிகாந்த் சென்று நடத்தி கொடுத்துள்ளார். ராகவா விக்னேஷ் என்ற ரசிகர் தனது மனைவியை அழைத்துச்சென்று சூப்பர்ஸ்டாரை சந்திக்க வைத்தது மட்டுமின்றி, அவர் கையால் வளையல் அணிவித்து வளைகாப்பு நடத்தியுள்ளார்.
குறித்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தியில் பதிவிட்ட ரசிகர், நிறைமாத கர்ப்பிணியான என் மனைவியின் ஆசையை ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய என் அன்பு தலைவருக்கு சிரம் தாழ்த்த நன்றிகள்…… கருவிலே தலைவரின் ரசிகனாய் இருக்கும் 3ம் தலைமுறை ரசிகனுக்கு தலைவரின் பொற்கரங்களால் நிகழ்ந்த வளைகாப்பு விழா என்று குறிப்பிட்டுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியான என் மனைவியின் ஆசையை ஒரு #தகப்பன்_ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய என் #அன்பு_தலைவருக்கு சிரம் தாழ்த்த #நன்றிகள்..?????? #கருவிலே தலைவரின் ரசிகனாய் இருக்கும் 3ஆம் தலைமுறை ரசிகனுக்கு தலைவரின் பொற்கரங்களால் #வளைகாப்பு விழா..???????? @rajinikanth @RBSIRAJINI pic.twitter.com/bSQ4yC5j1v
— Ragava vignesh (@Ragavavignesh1) December 15, 2019