இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள காளகந்தி மாவட்டத்தில் இருக்கும் பவானி பட்னா கிராமத்தை சார்ந்த இளம்பெண்ணொருவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில்., சம்பவத்தன்று பெண்ணின் கணவருடைய நண்பர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். மேலும்., இவர்கள் அனைவரும் பெண்ணை அங்குள்ள மறைவான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காம கொடூரன்கள் இது குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு., மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
மேலும்., அவரிடம் இருந்த ஏ.டி.எம் கார்டுகளையும் பறித்துவிட்டு சென்ற நிலையில்., பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவரின் நண்பர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்., இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.