நாட்டுப்புற பாடல்கள், சினிமா என கலக்கிய கனீர் குரலுக்கு சொந்தக்காரர் புஷ்பவனம் குப்புசாமி. அவரின் மனைவி அனிதாவாவும் அவருடன் இணைந்து பாடி வருகிறார்.
அவர் சென்னை ராஜா அண்ணாமலை புரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு பல்லவி என்ற மகள் இருக்கிறார்.
மருத்துவத்தில் பல்லவி பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்நிலையில் இவர்களின் குடும்ப உறவினரான கவுசிக் பல்லவியை காணவில்லை என போலிசில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் பல்லவிக்கு அவரின் சகோதரிக்கும் இரவில் நடந்த சண்டையில் கோபித்துக்கொண்டு கார் எடுத்துக்கொண்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என தெரியவந்துள்ளது.
இதனால் போலிசார் பல்லவியை தேடி வருகிறார்களாம்.