உல்லாச மோகத்தால், உள்ளே போன தொழிலதிபருக்கு காத்திருந்த பகீர்.!

புதுச்சேரியில் இருக்கும் சேதுராமன் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் என்பவர் ஈசிஆரில் இருக்கும் மசாஜ் சென்டருக்கு அடிக்கடி செல்வது வழக்கம். எனவே, அந்த மசாஜ் சென்டர் உரிமையாளர் உதயகுமார் மஞ்சுநாத் உடன் பழக்கமாகி இருக்கின்றார்.

இந்த நிலையில் மஞ்சுநாத் பெண்கள் மீது ஈர்ப்பு இருப்பதை அறிந்து கொண்ட உதயகுமார் முதலியார்பேட்டை ஒரு புதிய மசாஜ் சென்டர் தொடங்கி இருப்பதாகவும் அங்கே பல அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே மஞ்சுநாத் அங்கே சென்றுள்ளார். அப்பொழுது உதயகுமார் தன்னுடைய நண்பருடன் இணைந்து அவரை சரமாரியாக தாக்கி அரை நிர்வாணமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றார். மேலும், ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை பிடுங்கி இருக்கின்றார்.

இந்த விஷயத்தை வெளியே கூறினால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வீடியோவை பகிர்ந்து விடுவோம் என்று கூறி மிரட்டி இருக்கின்றார். ஒருகட்டத்தில் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல், மஞ்சுநாத் காவல் நிலையத்தை நாடினார். அந்த புகாரின் பேரில் உதயகுமாரை தேடிய காவல்துறையினர் அவருடைய மனைவி நண்பர் ஆகியோருடன் உதயகுமாரை கைது செய்தனர்.