தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் கதையில் களம் இது தானாம்..!!

தனுஷ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகின்றார். வடசென்னை, அசுரனை தொடர்ந்து தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், செல்வராகவன் என தரமான இயக்குனர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடைய இயக்கத்தில் நடித்தும் நடிக்கவும் உள்ளார்.

இந்நிலையில் தனுஷ் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார், இதில் ‘இப்படம் முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் கதை.

அது மட்டுமின்றி இப்படம் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது, அதோடு நல்ல எமோஷ்னலும் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.