பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நண்பனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியை தங்கை என்ற பாராது பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள களஹத்தி மாவட்டத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் பணி நிமித்தம் காரணமாக வெளியூருக்குச் சென்று தங்கி பணியாற்றி வரும் நிலையில்., டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று மாலை இவரது வீட்டிற்கு கணவரின் நண்பர் ஒருவர் சில பொருட்களை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
மேலும்., இவரது வீட்டில் கணவர் இல்லாத நிலையில்., பெண் தனது மாமியார் உடன் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த கொடூரன்., பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளான்.
இவரின் விபரீத எண்ணம் புரியாத வீட்டார் சாப்பிட்டுவிட்டு இரவு தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என்றும்., தற்போது அதிக நேரம் ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சமைத்துக் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு உறங்கிய நிலையில்., காலையில் இருசக்கர வாகனத்தில் கிளம்பி வீட்டிற்கு சென்றுள்ளான்.
இந்த நிலையில்., கணவர் செலவுக்கு அனுப்பி வைத்த பணத்தை எடுக்க ஏ.டி.எம் சென்ற நிலையில்., அவரை இடைமறித்த கொடூரன் தான் ஏ.டி.எம் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் ஏற்றி உள்ளார்.
பின்னர் அங்குள்ள ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்று தனது நண்பர்களை வரச்சொல்லி., பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.