நடிகை ராய் லட்சமி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..! பச்சையாக கமெண்ட் செய்த காயத்ரி ரகுராம்..!

சமீப காலமாக நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களையும், திரைத்துறையும் அதிர்ச்சியில் தள்ளி விடுகின்றனர். கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லட்சுமி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.

அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.


இந்நிலையில் துபாயில் தனது தோழியும் இந்தி நடிகையுமான ஷாமா சிக்கந்தருடன் அவர் பிகினி உடையில் படுகவர்ச்சியாக வலம் வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.

இதை தொடர்ந்து, இந்த புகைப்படத்துக்கு காயத்ரி ரகுராம் பெயரில் இருந்து கமெண்ட் ஒன்று வந்திருக்கிறது அதில், ” உண்மையிலேயே என்ன நோக்கத்திற்காக எடுக்கப்பட்டு இருக்கின்றது, எந்த நோக்கில் எடுக்கப்பட்ட போட்டோ என்பது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு மிகவும் நன்றாக விளங்கும். கேவலம் வெறும் பணத்துக்காகவும் புகழுக்காகவும் அழகை அடுத்தவர்களுக்குக் காட்சிப்படுத்தி விபச்சாரத்தை விட கேவலமான முறையில் உள்ளது என்று பதிவிடப்பட்டுள்ளது “.

காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது பெயரில் சிலர் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.