ரஜினி முதன் முறையாக எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தான் தர்பார்.
இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மாலை மும்பையில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் அந்த ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் பல கேள்விகள் கேட்டனர்.
அதில் ஒருவர் நீங்கள் இதுவரை இல்லாமல் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரஜினி ‘திருநங்கையாக நடிக்கவேண்டும்’ என்று கூறி அதிரவைத்தார்.