மம்மூட்டி மற்றும் உன்னி முகுந்தன், கனிகா என மலையாள நடிகர்கள் பலர் நடித்துள்ள படம் மாமாங்கம். இந்த உலகம முழுவதும் சுமார் 2000 தியேட்டர்களில் வெளிவந்தது. மொத்தம் 45 நாடுகளில் மாமாங்கம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தின் வசூல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன. 4 நாட்களில் கிராஸ் வசூல் 60.7 கோடி ருபாய் என அறிவித்துள்ளனர்.
மம்மூட்டி கேரியரில் இதுதான் மிகப்பெரிய ஓப்பனிங் என கூறியுள்ளனர். ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் ஒப்பிட்டால் மாமாங்கம் ஓப்பனிங் வசூலில் டாப் 3வது இடத்தை பிடித்துள்ளது.