தன்னை அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் கூறியதாகக் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு 3 அறிவுரைகளை வழங்கியதாகத் தெரிவித்தார்.
அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் எப்போதும் பிஸியாக இருக்கவேண்டும் என கூறிய அமிதாப் இறுதியில், தன்னை அரசியலுக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொண்டதாகக் ரஜினி தெரிவித்தார்.
அமிதாப் கூறிய முதல் இரண்டு விஷயங்களை மட்டுமே தம்மால் செய்ய முடிந்ததாக தெரிவித்த ரஜினி, 3-வது விஷயத்தை என்னால் செய்ய முடியவில்லை என குறிப்பிட்டார்.
இந்நிலையில், நேற்று மாலை தர்பார் டிரைலர் வெளியான 12 மணி நேரத்தில் சுமார் 58 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.