புதிய களனி பாலத்திற்கு அருகில் கொழும்பு நோக்கி வாகனங்கள் பயணிக்கும் இரு ஒழுங்கைகளில் ஒன்று மூடப்பட்டுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு – கண்டி வீதியில் (A01) கொழும்புக்கு வாகனங்கள் பயணிக்கும் வீதியே இவ்வாறு இன்று காலை 6.00 மணியிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியில் முன்னெடுக்கப்படும் கட்டுமான நடவடிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பொலிஸாருடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய போக்குவரத்து திட்டத்தின் ஒத்திகை நடவடிக்கையாக இன்று இவ்வொழுங்கை மூடப்படுவதாக, கட்டுமான திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் தர்ஷிகா ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனால் இலகு ரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் மாத்திரம் கொழும்புக்கு பயணிப்பதற்கான மாற்று வழியாக கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடைக்கு இடைப் பரிமாற்றத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்கலன்கள் மற்றும் லொறி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கொழும்பு, நீர்கொழும்பு (A03) வீதியை மாற்று வழியாக பயன்படுத்த முடியும் என, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.