ஹிந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்ஷிகா மோத்வானி. இவர் ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் நடித்துவிட்டு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாக்கு அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, எங்கேயும் காதல், வேலாயுதம் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்த இவர் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். இந்த நிலையில் கடந்த சில படங்களில் உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் தற்போது தீவிர உடல் பயிற்சி மூலம் உடல் எடையை முற்றிலும் குறைத்திருக்கிறார்.
உடல் எடை குறைந்த ஹன்சிகாவின் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக்காகி வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹன்சிகாவா இது? இப்படி மாறிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.