வெளிச்சம் போட்டு காட்டிய மீராமிதுன்!

பிக்பாஸ் மீரா மிதுன் கடந்த 2016ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் என்ற பட்டத்தை வென்ற பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூரியா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் அழகிப்போட்டி நடத்துவதாக தெரிவித்து பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கி இருந்தார்.

பின்னர் சர்ச்சை நாயகியாக வலம் வரும் மீரா மிதுனுக்கு பிக்பாஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. சக போட்டியாளர்களுடன் சுமுகமான சூழ்நிலையில் இருக்காமல் வாக்குவாதம் சண்டை என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர் சில நாட்களாக அவர்கள் கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று அவ்வப்போது சமூக வலைதளங்களில் முகம் காட்டி கொண்டிருப்பார். இதன்காரணமாக சென்னையை விட்டு வெளியேறிய மீராமிதுன் மும்பையில் இருந்து கொண்டு கவர்ச்சி புகைப்படங்கள், ஆபாச நடன வீடியோ என வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார்.


இந்நிலையில் தற்போது சிகப்பு நிற உடை ஒன்றை அணிந்து கொண்டு மிகவும் மோசமாக வீடியோ ஒன்றை எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டு, பின்னர் அங்கே தொட்டார்கள், இங்கே தொட்டார்கள் என சீன் போடுவது என்று திட்டி தீர்க்கின்றனர்.