ஆசைக்கு இணங்காத பெண்ணை தீயிட்டு எரித்த கொடூரன்!

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தங்களின் பணியை செய்து., பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேலும்., பெண்களில் பிறந்து சில மாதங்களேயானா குழந்தைகள் முதல் வயதை பெண்கள் வரை அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும்., கொடூரமாக கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து அரங்கேறியுள்ளது.

இந்த நிலையில்., பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் போது எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த துயரம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள நசிர்ப்புர் பகுதியில் கடந்த 7 ஆம் தேதியன்று வீட்டீர்கள் தனியாக இருந்த பெண்மணியை ராஜா ராய் என்ற கொடூர பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்.

இவனின் பிடியில் இருந்து பெண் தப்பிக்க பல முயற்சிகள் மேற்கொண்டதை அடுத்து., ஆத்திரமடைந்த கொடூரன் பெண்ணை தீயிட்டு எரித்து சென்றுள்ளான். பாதிக்கப்பட்ட பெண்மணி 90 விழுக்காடு தீக்காயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை மீண்டும் பதிவு செய்துள்ளது.