மும்பையில் எம்.எஸ்.பாபா திருத்தலத்திற்கு அருகே அமைந்துள்ள மாஹிம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரை ஓரம் நடந்து சென்றவர்கள் கருப்பு நிற சூட் கேஸ் ஒன்று கடல் நீரில் மிதப்பதைப் கண்டுள்ளனர். மேலும், அந்த சூட்கேஸில் இருந்து கால் ஒன்று வெளியே நீட்டியபடி இருப்பதையும், பார்த்து அதிர்ந்து போய் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், சூட்கேசை திறந்து பார்த்த பொழுது அதில் ஒரு ஆடவரின் கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி மற்றும் ஒருகால், அந்த ஆணின் மர்ம உறுப்பு ஆகியவை பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் கொலையான நபர் யார் அவருடைய தலை மற்றும் இன்ன பிற பாகங்கள் எங்கே என்பது குறித்து மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில், அவரை கொலை செய்தது அவருடைய வளர்ப்பு மகள் மற்றும், அவரின் காதலன் என்பது தெரியவந்துள்ளது. மகளின் காதலை கண்டித்ததுடன், பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக வளர்ப்பு மகளான ஆரத்யா தனது 16 வயது காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.