பெண்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் பயணிக்க உகந்த பாதை எது என்பதை காட்டும் வகையில் கூகுள் மேப்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கூகுளில் இருக்கும் கூகுள் மேப்ஸ் தளத்துக்கு சென்று, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களை குறிப்பிட்டால் சரியான பாதை காட்டப்படும்.
அந்த பாதையை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட இடத்திற்கு பயணம் செய்யலாம். இந்நிலையில் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் பயணிக்க ஏதுவான பாதை எது என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் தற்போது அறிமுகப்படுத்தவுள்ளது.
லைட்டிங் எனப்படும் இந்த புதிய வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் கூகுள் மேப்ஸில் காட்டப்படும் அதை பயன்படுத்தி நாம் பாதுகாப்பான சாலையை தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.
இந்த புதிய வசதியை முதல்முறையாக, இந்தியாவில் கூகுள் மேப்ஸ் கூடிய விரைவில் பரிசோதித்து பார்க்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.